வாழ்க்கையின் பாதையில் விழுந்தாலும்,
இங்க வந்து சேர போறோம் ஒரு கதையில.
உனக்கொரு கதை இங்க சொல்ல இல்ல நண்பா,
எனக்கொரு கதை இங்க எழுதல்ல நண்பா.
குறை சொல்லும் உலகத்தில் உன்னை நீயும் வெல்லடா,
உன் வலி பாதையில் நீயும் தேடி ஓடுடா.
உனக்கொரு ஆயுதம் நீ எழுதடா,
உடல் பொருள் ஆவியும் வலி சொல்லும்ட.
திறமையை தேடு,
உனக்கென ஓடு,
வலிமையயை தாங்கு,
பதவியை மீறு.
இருள் உள்ள பாதையில்,
பயம் உன்னை தேடும்,
உன் வலி கால்கள்,
அந்த ஒளியினை தேடும்.
இனி,
துணிவினை ஏற்றுக்கொள்,
தடைகளை கற்றுக்கொள்,
தோல்வியை தழுவிக்கொள்,
முயச்சியை வைத்துக்கொள்,
உறுதியை பெற்றுக்கொள்,
பயத்தினை எதிர்கொள்,
வெற்றியை நிலைகொள்.