[ Featuring ABISAN, Athisaiyan Suresh ]
முதற்பக்கம் அழகாலே
வரைந்தாய்நீ ஒருகவிதை
இருள்மாய்ந்திட
என் வலியை
வாரியாக விதைத்தாய்நீ
கண்ணீர் மழையெனச்சூழ்ந்திட
இரு உருவம் ஒன்றாக இணைந்தோமே
கடைசியில் தனிமையில் நான் இன்று
இக் கவிதை உனைச்சேர
உணர்வாய் நீ எந்தன் காதல் என்று
நீ சொன்ன வார்த்தைகள்
பொய்யேன்றில்லை அன்பே
இருந்தாலும்
என் மனமோ ஏத்திட மறுக்குது
போராட்டம் என் இதயத்தில் இன்றே
உன் விம்பம்
உன் விம்பம்
கல் மேலே எழுத்துப்போல
உன் காதல்
பொய்க்காதல்
நீ மேலே எழுத்தாயானது
மறைமுக வாழ்க்கை எந்தன் கதை இது
விடைகளைத் தேடியே மனம் அலையுது
நிரந்தரமா வலிகள்
நிறைவுறுமா கதைகள்
மறைமுக வாழ்க்கை எந்தன் கதை இது
விடைகளைத் தேடியே மனம் அலையுது
நிரந்தரமா வலிகள்
நிறைவுறுமா கதைகள்
கையோடு சேராத விரல்கள்
காத்தோடு ஒன்றாக சேராத
வெண்மேகம் இங்கே
தனிமையிலே நான்
பெண்ணே உன்னாலே
என் இரவு ஆத்தோட போகின்ற
கல்லாக நகராமல் இங்கே
கயல் போலே கண்கள்
மெல்லிடையே உருவம்
சிரிப்பூட்டும் குறும்பாலே விரைந்தோடிய நாட்களும்
கனவிலும் மறையா சிலையுண்ட வடிவம்
பெண் பாவை நீ
என் காதல் நீ
மதியொளியினை விதைத்தவள் நெஞ்சில் நீ
வலியானாய் நீ
பிறையானாய் நீ
கண் கலங்கிட எறிந்தாய் நேன்சில் தீ
மாற்றங்கன் எந்தன் நாவில்
புதுவித உலகை நீ காட்டிப்போக
மறைந்ததோடும் காலங்கள் தோறும்
மாற்றங்களாக மாறிப்போக
அழகே நீ பெண்ணுமில்லை
தேவதை உலகினை ஆளும் தென்றல்
இது போதும் எந்தன் வாழ்வும்
மோட்ச்சங்கள் பெற்றிடும் மாய்ந்து போக
மறைமுக வாழ்க்கை எந்தன் கதை இது
விடைகளைத் தேடியே மனம் அலையுது
நிரந்தரமா வலிகள்
நிறைவுறுமா கதைகள்
மறைமுக வாழ்க்கை எந்தன் கதை இது
விடைகளைத் தேடியே மனம் அலையுது
நிரந்தரமா வலிகள்
நிறைவுறுமா கதைகள்