காதல் பறவைகள் இரண்டு, கூண்டுக்குள் அடைந்தது போலே
உன் நெஞ்சாங்கூட்டில் நானும், கைதியாய் அடைந்தது ஏனோ...
மனதிற்க்குள் என்ன மயக்கம், காதல் சொல்ல தயக்கம்...
குளிரினால் வந்த நடுக்கம், உன்னுடன் சிலையாய் கிடக்கும்.
உன்னுடன் சிலையாய் கிடக்கும், உன்னுடன் சிலையாய்......
கிடக்கும்...
சிறகினை அடித்து பறக்கும் பொழுது, பட பட சத்தம் மனதை பறிக்கும்.
பொன்வாய் திறந்து நீ சிரிக்கும் பொழுது, கல கல சத்தம் கவிதையாய் ஒலிக்கும்.
கடலினில் அருகில் இருக்கும் பொழுது, சல சல சத்தம் நெஞ்சை தழுவும்...
உன்னருகில் நான் இருக்கும் பொழுது, வழ வழ வழவென இதயம் வழுக்கும்...
காதல் பறவைகள் இரண்டு, கூண்டுக்குள் அடைந்தது போலே
உன் நெஞ்சாங்கூட்டில் நானும், ஒரு கைதியாய் அடைந்தது ஏனோ...
கவிதையில் இருப்பது எழுத்தா, கடலினில் இருப்பது முத்தா..
கடக்கும் இடம் எங்கிலும் நீ, தெரிவது எந்தன் தப்பா...
மாலை சூரியன் மறையும், வெளிச்சம் ஊரெங்கும் குறையும்.
Nilavil un mugam parkthal antha nimidam epadi irukum
காதல் பறவைகள் இரண்டு, கூண்டுக்குள் அடைந்தது போலே
உன் நெஞ்சாங்கூட்டில் நானும் ஒரு கைதியாய் அடைந்தது ஏனோ...