குழந்தை மனம் போலே
பச்சை விரிப்பு
வளைந்த பாதைகளில்
இச்சை இருப்பு
பார்க்கும் முகங்களிலே
இருக்கும் சிரிப்பு
வேறு ஓர் உலகின்
மாய திறப்பு
கவலைகள் தாண்டிப்போகிறேன்
கண்களில் காட்சி கொய்கிறேன்
கடவுளின் காதல் தேசம் தான்
மலையகம் ஆகும் என்கிறேன்
பண்பாடிடும்
பனிக்காற்றிலே
புல்லாங்குழல் ஆகின்றேன்
இந்த புல் ஏந்திடும்
நீர் வில்லையில்
கண்டேன் என்னை பிள்ளையாய்
இயற்கைத்தாயே
புதைந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
விளைந்தேன் உன்மேலே
இயற்கைத்தாயே
கலந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
மலர்ந்தேன் உன்மேலே
இம்மூலிகை வாசம்
என்னோடு கதை பேசும்
இந்த உள்ளம் எங்கும் பாசம்
இங்கு உழைப்பொன்றே சுவாசம்
மலை மேலிருந்து பாயும்
நம்நெஞ்சை மெல்ல ஆயும்
நீரருவிகள் ஓயும்
இந்த இடம் அன்னை மடியாகும்
இது ஆதாரம்
வாழ்வாதாரம்
இது தொழிலில்லை
எங்களோட சாமி
நீ குனிந்தாலும்
நாடே தலை நிமிரும்
இது மேன்மைநிலை
மக்களோட பூமி
வளங்களும் இங்கே நிறைந்திருக்கு
உடல் விட்டு உயிர் கூட உறைந்திருக்கு
பெருமைக்கும் இங்கே பஞ்சமில்லை
உலகமுன் அழகிலே தஞ்சம் கொள்ள
இயற்கைத்தாயே
புதைந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
விளைந்தேன் உன்மேலே
இயற்கைத்தாயே
கலந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
மலர்ந்தேன் உன்மேலே
இயற்கைத்தாயே
புதைந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
விளைந்தேன் உன்மேலே
இயற்கைத்தாயே
கலந்தேன் உன்னுள்ளே
இயற்கைத்தாயே
மலர்ந்தேன் உன்மேலே