சாவு.சாவு!
சஞ்சலம் தீர்க்கும் மருந்து..
அது சாந்தியும் நிம்மதியும் தரும் விருந்து!
பஞ்சம் பசிபிணியால் தவிப்பவற்கு இனி அஞ்சேல் என அபயம் அளிக்கும்!
நெஞ்சத்துயர் சுமையால் துடிப்பவர்க்கு அது நீங்காத அமைதியைக் கொடுக்கும்!
சாவியின் மடியில் தான் கவலையில்லை செத்தும் சாகாமல் வாழும் இந்த நிலைமை இல்லை!
வாழ்வும் இல்லை! சாவில் தாழ்வும் இல்லை! நானும் இல்லை, அங்கே நீயும் இல்லை.
அழுக்கு.. அழுக்கு!
உள்ளே அழுக்கு இருக்க வெளியழுக்கை விளக்க நினைப்பது ஏன் மடநெஞ்சமே!
உற்று நினைத்துப்பார் நீ இதை கொஞ்சமே!
குள்ள நரித்தன கள்ளம் கபடங்கள் உள்ளத்தில் ஒரு கோடி உண்டு. அதை வெள்ளைத் துணி களாலும் வெல்லம் போல் சொல்லாலும் மூடி மறைப்பவர்கள் உண்டு. அந்த
மனிதர் அழுக்கை என்னிப்பாரு!
அதை அகற்ற நல்ல வழி கூறு!
சிக்கை அறுத்துவிட முடியும்! அந்த சிக்கை யாரால் அறுக்க முடியும்!
இந்த சிக்கை அறுத்துவிட முடியும்! அந்த சிக்கை யாரால் அறுக்க முடியும்! பக்குவம் அடையாத பால் மனம் தன்னையே பாசக்குடியும் பின்னி பற்றிப் படருதே!!மக்கள், மனைவி சொந்தம் மாதா பிதாவின் பந்தம் திக்குத் தினரி நெஞ்சைத் திண்டாடச் செய்யுதே!